தனது நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தொடர் வெற்றி பெற ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ளார், அருண் விஜய். இவரது படத்தின் ரீ-மேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.
பல முன்னணி ஹீரோக்களுக்கு வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஹரி, முதல் முறையாக அருண் விஜய்யுடன் கூட்டணியமைத்து யானை எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
அச்சம் அடைந்தாரா அருண் விஜய்
மேலும் ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரப் பட்டாளங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் காரைக்குடியில் நடைபெற்ற இறுதிகட்டப் படப்பிடிப்பின் போது, யானை படக்குழுவினருடன் இருக்கும் செல்ஃபியை அருண் விஜய் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் யானை திரைப்படமானது அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிடப்படுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பட வெளியீடு குறித்த தகவல் முன்னரே வெளியானதால், நடிகர் அருண் விஜய் அச்சமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:மாநாடு - 2 வெளியாவது உறுதி? - மனம்திறந்த வெங்கட் பிரபு!