நடிகர் அருண்விஜய் ’என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் திருப்புமுனை கண்டு, தற்போது சிறந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்துவருகிறார். கடந்த மார்ச் மாதம் அவர் நடித்து வெளியான ‘தடம்’ திரைப்படமும் ரசிகர்களிடம் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றது. ’துருவங்கள் பதினாறு’ படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய் ‘மாஃபியா’ என்ற படத்தில் நடித்துள்ளார். பிரசன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
’அருண்விஜய் 30’ படத்தின் டைட்டிலை வெளியிட்ட 'கைதி'...! - sinam movie
அருண்விஜய் நடிக்கும் 30ஆவது படத்தின் டைட்டிலை நடிகர் கார்த்திக் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கத்தில் அருண்விஜய் தனது 30ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். தொடக்கத்தில் 'அருண்விஜய் 30' என்ற தற்காலிக பெயருடன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டிலை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிட்டார்.
இதன்மூலம், அருண்விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 30ஆவது படத்தின் பெயர் ‘சினம்’ என்று தெரியவந்துள்ளது. படத்தின் டைட்டிலை வெளியிட்ட கார்த்திக்குக்கு அருண்விஜய் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நன்றி அண்ணா” என்று ட்வீட் செய்துள்ளார். இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பலக் லால்வாணி நடிக்கிறார். சபீர் இசையமைக்கிறார். தற்போது அருண்விஜய் பாக்ஸர், அக்னி சிறகுகள் உள்ளிட்ட படங்களிலும் நடித்துவருகிறார்.