'குற்றம் 23' படத்தின் வெற்றிக்குப் பிறகு அருண் விஜய் - இயக்குநர் அறிவழகன் மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
அருண் விஜய் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்! - அருண் விஜய்யின் படங்கள்
அருண் விஜய்யின் 31ஆவது படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இது அருண் விஜய்யின் 31ஆவது படம் என்பதால் தற்காலிகமாக '#AV31' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் அருண் விஜய்யுடன் ரெஜினா, ஸ்டெஃபி பட்டேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. சமீபத்தில் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தின் இறுதிகட்டப் பணிகளை படக்குழுவினர் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் ஏப்ரல் 14, 15 ஆகிய தேதிகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.