Yaanai Teaser: இயக்குநர் ஹரி - அருண் விஜய் கூட்டணியானது முதன்முறையாக ‘யானை’ படத்தில் இணைந்துள்ளது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க யோகி பாபு, சினேகன், ராதிகா, கங்கை அமரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த ஜூலை மாதம் ராமேஸ்வரத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் காரைக்குடியில் நிறைவடைந்தது. இந்நிலையில் 'யானை' திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகியுள்ளது.