நடிகர் அருண் விஜய் ’என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் திருப்புமுனை கண்டு, தற்போது நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான ‘தடம்’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
’துருவங்கள் பதினாறு’ படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் ‘மாஃபியா’ என்ற படத்தில் நடித்துள்ளார். பிரசன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து அருண் விஜய் இயக்குநர் ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படம் அருண் விஜய் உடைய 30ஆவது படமாகும். எனவே 'அருண் விஜய் 30' என்ற தற்காலிக பெயருடன் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பலக் லால்வாணி நடிக்கிறார். சபீர் இசையமைக்கிறார்.
இப்படம் குறித்து அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தடம் படத்தின் இனியே பாடலுக்குப் பிறகு மதன் கார்க்கியுடன் மீண்டும் இணைகிறேன். சபீரின் மதி மயக்கும் இசைக்காக காத்திருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். தற்போது அருண் விஜய், பாக்ஸர், அக்னி சிறகுகள் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் வாசிங்க: அக்னி சிறகுகளில் ஒரு சிறகான கமல் மகள்!