அருண் விஜய் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மாஃபியா. ப்ரியா பவானி ஷங்கர், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. ஆக்க்ஷன், த்ரில்லர் பாணியில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
'படத்தை வெற்றியடைய வைத்த அனைவருக்கும் நன்றி' - அருண்விஜய் - arun vijay movie
மாஃபியா படத்தின் வெற்றி குறித்து நடிகர் அருண்விஜய் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இதையொட்டி, நேற்று பிரபல நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்து அருண்விஜய் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ”மாஃபியா திரைப்படத்தை வெற்றியடைய வைத்ததற்கு அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இப்படத்தின் மூலம் தமிழ்நாட்டில் பெரிய போதைப் பொருள், திருட்டுத்தனங்கள் அதிகம் உள்ளது தெரியவந்தது.
இதுபோன்றவை தமிழ்நாட்டில் இருப்பது வருத்தமளிக்கிறது. இதற்கான விழிப்புணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும். நான் தற்போது சினம், அக்னி சிறகுகள் போன்ற படங்களில் நடித்து வருகிறேன். மேலும் திரைப்படங்களை திரையரங்குகளில் பார்த்தால்தான் அந்தப் படத்திற்கான தொழில்நுட்ப பிரம்மாண்டம் அனைத்தையும் பார்வையாளர்கள் ரசிக்க முடியும். அதனால் படங்களை வளைதளங்களில் பார்க்க வேண்டாம்” என்று கூறியுள்ளார் .