ஜி.என்.ஆர். குமார் வேலன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சினம்'. மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக, பல்லக் லால் வாணி நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் அருண் விஜய் நடித்துள்ள சினம் படத்தின் டீசர் வெளியானது.
அருண் விஜய்யின் 'சினம்' டீசர் வெளியீடு! - சினம்' டீசர் ரிலீஸ்!
சென்னை: அருண் விஜய் நடித்துள்ள சினம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இப்படத்தை மூவிங் லைட்ஸ் சார்பில் அருண் விஜய்யின் தந்தை விஜயகுமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அருண் விஜய் போலீசாக நடித்துள்ளார். காளி வெங்கட் முக்கியக் பாத்திரத்தில் நடித்துள்ளார். முற்றிலும் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள இப்படத்தின் டீசர் இன்று (ஜன. 11) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
முன்னதாக, படத்தில் அருண் விஜய்யின் ‘ஆங்காரத் தோற்றம்’ ரசிகர்களிடம் பேராதரவு பெற்றது. காவல் ஆய்வாளர் பாரி வெங்கட் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கிறார். உணர்வுப்பூர்வமான, த்ரில்லர் பாணியில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.