'குற்றம் 23' படத்திற்கு பிறகு அருண் விஜய்- அறிவழகன் கூட்டணி புதிய படத்தில் இணைந்துள்ளது. அதிக பொருள்செலவில் தயாராகும் ஸ்பை ஆக்ஷன் த்ரில்லரான இப்படத்தில் அருண் விஜய்யுடன் ரெஜினா, புதுமுகம் ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் பகவதி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் பிரமாண்டமாக நடந்துள்ளது. சுமார் 3000க்கும் மேற்பட்ட துணை நடிகர்களை கொண்டு கிரிக்கெட் மைதானம் ஒன்றில் படத்தின் இறுதி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.