தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’மாஃபியா’ ஃபர்ஷ்ட் லுக் வெளியானது - கார்த்திக் நரேன்

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஃபியா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மாஃபியா-ஃபர்ஷ்ட் லுக் வெளியானது

By

Published : Jul 3, 2019, 12:39 PM IST

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள ‘மாஃபியா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் அருண்விஜய் ’என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் திருப்புமுனை ஏற்பட்டு தற்போது நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான ‘தடம்’ திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

’துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இவர் அதன்பிறகு நடிகர் அரவிந்த் சாமியுடன் இணைந்து ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கினார். ஆனால் சில பிரச்னைகள் காரணமாக அந்தத் திரைப்படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், லைகா நிறுவனம் தயாரிப்பில் அவர் அருண் விஜய் உடன் கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் திரைப்படத்துக்கு ‘மாஃபியா’ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details