'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண் வைத்தியநாதன். இதனையடுத்து ஒரு சில படங்களை இயக்கிய இவர் கடைசியாக அர்ஜுனை வைத்து 'நிபுணன்' படத்தை இயக்கினார்.
இதனையடுத்து அவர் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழ் சினிமாவில் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் படங்கள் மிகவும் குறைவு. அப்படி எடுக்கப்படும் படங்களிலும் காதல், சண்டை காட்சிகள் இடம்பெறுகிறது.
அவ்வாறாக இல்லாமல் குழந்தைகளின் உலகத்தை, குழந்தைகளுக்காகக் குழந்தைகளை வைத்தே காட்ட வேண்டும் என்கிற முயற்சியில் இப்படம் உருவாகிறது. குழந்தைகளுக்கான திரைப்படமாக இருந்தாலும், இது அனைத்து வயதினரையும் கவரும். கரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள்தான் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.