தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அருள்நிதியின் 'டைரி' போஸ்டரை  வெளியிட்ட வெற்றிமாறன்! - டைரி டைட்டில் போஸ்டரை வெளியிட்ட வெற்றிமாறன்

சென்னை: அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.

டைரி
டைரி

By

Published : Jul 21, 2020, 3:27 PM IST

வம்சம், மௌனகுரு, தகராறு, டிமான்ட்டி காலனி, ஆறுவது சினம் உள்ளிட்ட 13 படங்களில் நடித்துள்ள நடிகர் அருள்நிதி தற்போது, சீனு ராமசாமி இயக்கத்தில் ’களத்தில் சந்திப்போம்’ படத்தில் நடித்துவருகிறார். படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்து ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படம் குறித்த தகவல் இன்று (ஜூலை 20) வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அருள்நிதியின் புதிய படத்தின் டைட்டிலை இயக்குநர் வெற்றிமாறன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில், அருள்நிதியின் 14ஆவது படத்தின் பெயர் 'டைரி' என்று பதிவுசெய்து, அப்படத்தின் ஒரு போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். டைரி படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details