தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம்வரும் அருள்நிதி இன்று (ஜூலை 21) தனது 34ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் அருள்நிதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது அலுவலகத்திற்குச் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.