சென்னை: 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தை சிறப்பு காட்சியாக ஓவியர்களுக்கு திரையிட்ட அப்படத்தின் இயக்குநர் பார்த்திபன், அவர்களுடன் கலந்துரையாடினார்.
இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7'. இந்தப் படம் வரும் 20ஆம் தேதி வெளியாகிறது.
இதனையடுத்து சென்னை கோடம்பாக்கத்தில் படத்தின் விமர்சனம் மற்றும் கருத்து பகிர்வு நிகழ்வு தொடர்ந்து 24 மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்று வருகிறது.
கற்பனை கேரக்டர்களுக்கு உருவம் கொடுத்த ஓவியர்கள் - 'ஒத்த செருப்பு' குழுவினரின் புதிய முயற்சி இதனிடையே சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓவியர்களுக்கு 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதன் முடிவில் படத்தில் வரும் கற்பனை கதாபாத்திரங்களின் உருவம் எப்படி இருக்கும் என்பதை ஓவியர்கள் வரையும் நிகழ்வு நடைபெற்றது.
கற்பனை கேரக்டர்களுக்கு உருவம் கொடுத்த ஓவியர்கள் - 'ஒத்த செருப்பு' குழுவினரின் புதிய முயற்சி இதனைத்தொடர்ந்து படம் பார்த்த ஓவியர்களுடன் நடிகர் பார்த்திபன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர் .
கற்பனை கேரக்டர்களுக்கு உருவம் கொடுத்த ஓவியர்கள் - 'ஒத்த செருப்பு' குழுவினரின் புதிய முயற்சி