"திருமணத்தைத் தாண்டிய உறவால் மனைவி வெட்டிக்கொலை" என்ற செய்திகள் மிகச்சாதரணமாக நம்மைக் கடந்து செல்கின்றன. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அப்படியான மனநிலைக்கு இச்சமூகத்தின் கலாசார மீறல் நம்மை தள்ளிவிட்டது. இது ஆபத்தானது என்பதை அறிவுறுத்த வந்திருக்கும், ஒரு நேர்த்தியான குறும்படம் தான் "ஆர்டிகள் 497 கள்ளக்காதல்"
நெக்ஸ்ட் லெவல் புரொடக்சன் தயாரித்துள்ள இப்படத்தை சிலம்புச்செல்வன் எழுதி, இயக்கி இருக்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள 'தமிழரசன்' படத்தைத் தயாரித்துள்ள பெப்சி சிவா இக்குறும்படத்தைத் தயாரித்துள்ளார். தனது தமிழ் மீடியா யூடியூப் சேனலில் இக்குறும்படத்தை வெளியிட்டுள்ளார். வெளியிட்ட சில நொடிகளிலேயே பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்று, இக்குறும்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படம் குறித்து பெப்சி சிவா கூறுகையில், " திருமணத்தைத் தாண்டிய உறவால், ஆண், பெண் இருவரும் தவறுகள் செய்வதை சுட்டிக்காட்டும் இக்குறும்படம் பெண்களுக்கு அதிக சலுகைகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் பெண்களுக்கு பொறுப்பும் மிக அவசியம் என்பதை பேசியுள்ளது. படத்தில் வயதான பின் திருமணம் ஆகி, மனைவியின் பழைய காதலனால் ஏற்படும் இயலாமையைச் சுமக்கும் பாத்திரத்தில் நாயகன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.