தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

படப்பிடிப்புக்கு தயாரான உதயநிதி...தொடங்குகிறது ஆர்ட்டிக்கிள் 15 ரீமேக் ! - article 15 shoot

ஆர்ட்டிக்கிள் 15 திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Article 15 tamil remake
படப்பிடிப்புக்கு தயாரான உதயநிதி

By

Published : Aug 2, 2021, 3:55 AM IST

தமிழ் சினிமாவில் நடிகராகவும், பாடலாசிரியராகவும் வளம்வரும் அருண் ராஜகாமராஜ் , ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து இயக்கிய கனா திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் பிரபலமடைந்தார்

தற்போது, இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஆர்ட்டிக்கிள் 15' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை உதயநிதியை வைத்து இயக்கி வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் பொள்ளாச்சியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், கரோனா, சட்டப்பேரவை தேர்தல் ஆகியவற்றால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

தொடங்குகிறது ஆர்ட்டிக்கிள் 15 ரீமேக் படம்

இந்நிலையில், ஆர்ட்டிக்கிள் 15 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக, உதயநிதி ஸ்டாலின் 20 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:இறுதிகட்ட படப்பிடிப்பில் சியான் 60!

ABOUT THE AUTHOR

...view details