அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, இஷா தல்வார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படம் ‘ஆர்டிக்கல் 15’. சினிமா விமர்சகர்களும், பொது மக்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட இப்படத்தை இயக்கிய அனுபவ் சின்ஹா, ‘தப்பட்’ (Thappad) எனும் தனது புதிய படத்தில் டாப்சியுடன் பணிபுரிகிறார். இது டாப்சி - அனுபவ் சின்ஹா கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
#Article15 இயக்குநரின் அடுத்த படைப்பு வெளியாகும் தேதி இதுதான்! - அனுபவ் சின்ஹா
ஆர்டிக்கல் 15 (Article15) திரைப்பட இயக்குநர் தனது அடுத்த திரைப்படம் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளார்.
![#Article15 இயக்குநரின் அடுத்த படைப்பு வெளியாகும் தேதி இதுதான்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4376278-816-4376278-1567944527104.jpg)
Thappad
2018ஆம் ஆண்டு இதே கூட்டணியில் உருவான ‘மல்க்’ (Mulk) திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. டாப்சி அதில் வக்கீல் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தற்போது அனுபவ் சின்ஹா - டாப்சி கூட்டணி அமைத்துள்ள இந்த புதிய திரைப்படம் வருகிற சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி மார்ச் 6, 2020 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.