'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து, சீயான் விக்ரம் 58 படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் அனைவரையும் பிரமிக்க வைத்தது. புதிதான முறையில் விக்ரமின் வேடம் இதுதான் என்பதை கணிக்க முடியாத வகையில் அமைந்தது. ஆக்சன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
விக்ரம் 58 படத்தின் மாஸான அப்டேட்..! - ARR compose music
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் மூன்றாவது படத்தில் விக்ரம் நடிப்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் செய்தி, ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. விக்ரம் 58 படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதனை இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராவணா, ஐ படத்தைத் தொடர்ந்து விக்ரம் 58 படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்திருப்பது இப்படத்திற்கான பலத்தை கூட்டியுள்ளது. இப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.