டெர்மினேட்டர், பிரிடேட்டர், கமாண்டோ உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்கள் மூலம் பிரபலம் அடைந்தவர் ஆக்சன் நாயகன் அர்னால்டு. அவரது கட்டுமஸ்தான உடலமைப்பால், தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவருக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் என ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் அர்னால்டின் மூத்த மகளான கேத்ரின், கார்டியன் ஆஃப் தி கேலக்ஸி படத்தின் மூலம் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கிறிஸ் பிராட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சனிக்கிழமையன்று கலிபோர்னியாவின் மான்டெசிட்டோவில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர், நண்பர்களுக்கு மட்டுமே பங்கேற்றனர். தற்போது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதை உறுதிப்படுத்தியுள்ளனர்.