தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஹீரோவானார் மிரட்டல் வில்லன் அர்ஜுன் தாஸ் - ஹீரோவானார் அர்ஜுன்தாஸ்

கரகரப்பான குரல், கூர்மையான பார்வை, கண்களில் குரூரம் என வில்லத்தனத்தில் மிரட்டி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் அர்ஜூன் தாஸுக்கு தற்போது வசந்தபாலனின் புதிய படத்தின் ஹீரோ புரொமோஷன் கிடைத்துள்ளது.

actor arjun das
நடிகர் அர்ஜுன் தாஸ்

By

Published : Feb 12, 2021, 3:52 PM IST

சென்னை: இயக்குநர் வசந்தபாலன் தயாரித்து, இயக்கும் புதிய படத்தின் ஹீரோவாகியுள்ளார் வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸ்.

வெயில், அங்காடி தெரு, அரவான், காவியத்தலைவன் என வித்தியாசமான படங்களை இயக்கி சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் வசந்தபாலன். இவர் தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து தொடங்கியிருக்கும் சொந்த தயாரிப்பு நிறுவனமான அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில், கைதி, மாஸ்டர் படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன்தாஸ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தனது தனித்துவமான குரலால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அர்ஜுன் தாஸ், மீம் கிரியேட்டர்களின் கன்டெண்ட்டாகவும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகிறார்.

விருதுநகரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் படித்து நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமை மிக்க பள்ளியான கஷ்த்திரிய வித்யாசாலாவில் தன்னோடு பயின்று மூன்று நண்பர்களுடன் இணைந்து அர்பன் ஸ்டுடியோஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து பிப். 11ஆம் தேதி முறையான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, தங்களது நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் குறித்தும் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க அர்ஜுன் தாஸை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

வசந்தபாலன் படத்தின் ஹீரோவான அர்ஜுன் தாஸ்

இயக்குநர் வசந்தபாலன், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷை வைத்து 'ஜெயில்' என்ற படத்தை தற்போது இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் வெளியீட்டுக்கான பணியில் மும்முரமாக இருந்துவரும் அவர், தற்போது தனது அடுத்த படத்தின் வேலைகளையும் தொடங்கியுள்ளார்.

'ஜெயில்' படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளன.

இதையும் படிங்க: ஆண் குழந்தைக்குத் தாயானார் விக்ரம் பட நடிகை

ABOUT THE AUTHOR

...view details