ஓம் சாந்தி ஓம், டான், ராக் ஆன், ஹவுஸ் ஃபுல் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்தவர் பிரபல வில்லன் நடிகர் அர்ஜூன் ராம்பால்.
இவர் முன்னதாக நடிகை கங்கனா ரனாவத்துடன் ’தாக்கட்’ எனும் படத்தில் நடித்து வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், ஸ்டைலிஷான ’ப்ளாண்ட் ஹேர்’ எனப்படும் ஹேர் ஸ்டைலுடன் தாக்கட் படப்பிடிப்புக்கு அர்ஜூன் ராம்பால் திரும்பியுள்ளார்.
48 வயதாகும் அர்ஜூன் ராம்பால், தனது இந்தப் புதிய ஹேர்ஸ்டைலுடன் கூடிய புகைப்படங்களை, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ”வயதானாலும் ஒய்ன் போல் திகழ்கிறார்” என்றும், ”மிகக் கவர்ச்சியாக உள்ளார்” என்றும் அவரது பலதரப்பட்ட ரசிகர்களும் புகழ்ந்து வருகின்றனர்.