தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அறிவழகன், அருண் விஜய் இணையும் வெப் சிரீஸ்! - சினிமா செய்திகள்

அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் வெப் சீரிஸின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படுகிறது.

By

Published : Sep 2, 2021, 5:49 PM IST

Updated : Sep 2, 2021, 6:43 PM IST

சென்னை: ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் - 23 போன்ற படங்களை இயக்கியவர் அறிவழகன். இவர் தற்போது அருண் விஜய் நடிக்கும் 'பார்டர்' படத்தை இயக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மிக பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் அறிவழகன், அருண் விஜய் கூட்டணி மீண்டும் வெப் சீரிஸ் மூலம் ஒன்றிணைகிறது.

இந்த வெப் சீரிஸ், சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரசி வலைதளங்கள் குறித்த படமாக இது உருவாகிறது என்றும், விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது எனவும் கூறப்படுகிறது. நடிகர் அருண்விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பிக்பாஸ் மகத்துக்கு வில்லனாகும் புதுமுகம்!

Last Updated : Sep 2, 2021, 6:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details