அட்லி - விஜய் கூட்டணியில் மூன்றாவது படமாக 'பிகில்' தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 'பிகில்' படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணியளவில் வெளியானது, அதனை தற்போது வரை 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
archana kalpathi with vijay முன்னதாக அர்ச்சனா கல்பாத்திக்கு நடிகர் விஜய் ஃபுட்பாலில் 'பிரியமுடன் விஜய்' என்று எழுதி பரிசு வழங்கினார். அவர் கொடுத்த பரிசையும், அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் அர்ச்சனா இணையத்தில் வெளியிட்டார்.
archana kalpathi tweet about bigil trailer இந்நிலையில் 'பிகில்' படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, படத்தின் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் விஜய்யின் ரசிகையாகவும் ட்ரெய்லரை பார்த்துவிட்டு ட்வீட் செய்துள்ளார். அதில், "எங்களுக்கு ஃபுட்பால் எல்லாம் தெரியாது, ஆனா எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்" என்று ட்ரெய்லர் டயலாக்கை பதிவிட்டு, "என்ன புள்ளிங்கோ நம்ப அண்ணன் ட்ரெய்லர ட்ரெண்ட் பண்ண ரெடியா" என்றும் டூவிட் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஹீ இஸ் தி பிரைட் ஆஃப் நேஷன் - பிகிலின் வெறித்தன ஆட்டம்!