'தெறி', 'மெர்சல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் -அட்லி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
பெரும் பொருட்செலவில் ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இவ்வருட தீபாவளிக்கு பிகில் வெளியாகவுள்ளது.
'பிகில்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், அப்படத்தின் தற்போதைய அப்டேட் செய்திகள் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.