தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வணங்காமுடி: யூத்தான அரவிந்த்சாமி! - Aravindsamy play 6 getup in vanangamudi movie

வணங்காமுடி படத்துக்காக உடலை ஏத்தி யூத் போல காட்சி அளிக்கிறார் அரவிந்த்சாமி.

ஆறு வித கெட்டப்புகளில் அரவிந்தசாமி
ஆறு வித கெட்டப்புகளில் அரவிந்தசாமி

By

Published : Aug 11, 2021, 7:00 PM IST

அரவிந்தசாமி – செல்வா கூட்டணி இணைந்துள்ள ‘வணங்காமுடி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. 3 நாளில் 2 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ஹிட் அடித்திருக்கிறது இந்த டீசர்.

வணங்காமுடி: யூத்தான அரவிந்த்சாமி
‘வானம்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களை தயாரித்த கணேஷ் ரவிச்சந்திரன் தற்போது மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பாக ‘வணங்காமுடி’ படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார். அரவிந்தசாமி ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான இந்த டீசரில் அரவிந்தசாமியா இது? என்று வியக்கும் அளவிற்கு அதே இளமையுடன் விதவிதமாக கவனம் ஈர்க்கிறார்.
வணங்காமுடி: யூத்தான அரவிந்த்சாமி
இந்தப் படத்தை ‘நான் அவன் இல்லை’ பார்ட் 1 & 2 ஹிட் படங்கள் கொடுத்த செல்வா இயக்கியுள்ளார். படம் குறித்து இயக்குநர் செல்வா கூறியதாவது, ‘‘இது போலீஸ் கதை. வழக்கமான டமால்-டூமில் போலீஸ் கதையாக இல்லாமல் தன்னுடைய புத்திச்சாலித்தனத்தை கொண்டு ஹீரோ எப்படி குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறார். அந்த வகையில் ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் வழக்குகள் எப்படி உள்ளே நுழைகிறது என்பதையும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க அவர் எவ்வித முயற்சி எடுக்கிறார் என்பதையும் விறுவிறுப்பான திரைக்கதையில் காட்சிப்படுத்தியுள்ளேன். அரவிந்தசாமியின் படங்களில் இது முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.
வணங்காமுடி: யூத்தான அரவிந்த்சாமி

கலைஞர்கள்:

நடிகர், நடிகைகள்: அரவிந்தசாமி, ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன், சாந்தினி,தம்பிராமையா, ஜெயபிரகாஷ்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: செல்வா

இசை: இமான்

ஒளிப்பதிவு:கோகுல் பினாய்

எடிட்டிங்: ஆண்டனி

பாடல்கள்:விவேகா, அருண்ராஜா காமராஜ்

நடனம்:ஸ்ரீதர், தினேஷ்

மக்கள் தொடர்பு:ஜான்சன்

தயாரிப்பு: மேஜிக் பாக்ஸ் புரொடக்‌ஷன் கணேஷ் ரவிச்சந்திரன்

இதையும் படிங்க:நடிகை மீரா மிதுன் நாளை விசாரணைக்கு ஆஜராக சம்மன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details