'காதல் கொண்டேன்' படத்தை இயக்கிய பின் இயக்குநர் செல்வராகவன் இரண்டாவது படமாக '7ஜி ரெயின்போ காலனி' படத்தை இயக்கினார். இப்படத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா (கதிர்) அறிமுகம் ஆனார். இவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் (அனிதா) நடித்திருந்தார். கதிரும் அனிதாவும் இன்றைக்கும் மறக்க முடியாத காதலர்களாகவே இருந்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
செல்வராகவனுக்கு இரண்டாவது படமான '7ஜி ரெயின்போ காலனி'யும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இப்படத்தின் முக்கிய பலமாக ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா இருந்தார். தனது புதிய காட்சிகள் மூலம், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.
இதனையடுத்து அரவிந்த் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் '7ஜி ரெயின்போ காலனி' படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தற்போது பதிவிட்டுள்ளார்.