பிரபல சின்னத்திரை காமெடியனான அறந்தாங்கி நிஷாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே நிஷாவுக்கும் அவரது கணவர் ரியாஸ் அலிக்கும் பள்ளி செல்லும் மகன் இருக்கிறார்.
சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சி, திரைப்படங்கள் என பிஸியாகவே இருந்த நிஷா, 'நான் கர்ப்பமாக இருக்கிறேன்' என சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அவரது சொந்த ஊரான அரந்தாங்கியில் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.