சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் 'அரண்மனை 3' படத்தின் படப்பிடிப்பு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்கியுள்ளது.
'அரண்மனை' சீரீஸ் படங்களில் மூன்றாம் பாகமாக உருவாகும் இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, சம்பத் குமார், நந்தின், விச்சு, மனோபாலா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.
முந்தைய பாகங்களைப் போல் காமெடி கலந்த திகில் படமாக 'அரண்மனை 3' உருவாகவுள்ளது. இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு குஜராத்திலுள்ள ராஜ்கோட் நகரில் தொடங்கியது. அங்குள்ள வான்கெனர் அரண்மனையில் படத்தின் பிரதான காட்சிகளைப் படக்குழுவினர் படமாக்கி வருகிறார்கள்.
மிகப் பெரிய அரண்மனையான இங்கு 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்புத் தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை ராஷி கண்ணா, மனோபாலா தங்களது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.