தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அக்டோபரில் 'அரண்மனை 3' ரிலீஸ் - நடிகை ராஷி கண்ணா

அரண்மனை சீரிஸ் படங்களில் இரண்டு பாகங்கள் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் 'அரண்மனை 3' திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

aranmanai 3 movie release date announced
அக்டோபரில் அரண்மனை 3 ரிலீஸ்

By

Published : Sep 15, 2021, 8:28 PM IST

சென்னை: ஆர்யா - ராஷி கண்ணா ஜோடியாக நடித்துள்ள அரண்மனை மூன்றாம் பாகம் திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பங்கள் சிரித்துக் கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் வல்லவரான சுந்தர் சி இயக்கிய அரண்மனை, அரண்மனை 2 ஆகிய படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்த இரு படங்களும் திகில், காமெடி கலந்து அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கும் படமாக அமைந்திருந்தது.

இந்த இரு படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது இயக்குநர் சுந்தர் சி, அரண்மனை மூன்றாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர் சி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் காமெடியனாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா, யோகி பாபு, மனோ பாலா, சம்பத், சாக்‌ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'அரண்மனை 3' என்ற தலைப்பில் வெளியாக இருக்கும் இந்தப் படம் முந்தைய இரண்டு பாகங்களை விட மிகப்பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

படத்தை அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை குஷ்பு தயாரித்துள்ளார். படத்துக்கு இசை - சி.சத்யா.

இதைத்தொடர்ந்து 'அரண்மனை 3' வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ள நிலையில், படத்தை வரும் அக்டோபர் 14ஆம் தேதி திரையரங்கில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே படத்திலிருந்து சிங்கிள் டிராக் பாடல் ஒன்றும், பல்வேறு புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விரைவில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: நாமும் நமது உறுதியற்ற நிலைப்பாடுகளுமே மாணவர்கள் மரணங்களுக்கு காரணம் - பா. ரஞ்சித்

ABOUT THE AUTHOR

...view details