சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'அரண்மனை’ பேய் படம் இதுவரை இரண்டு பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. தற்போது மூன்றாம் பாகம் விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது.
இதில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. முந்தைய பாகங்களைப் போல் காமெடி கலந்த திகில் படமாக 'அரண்மனை 3' உருவாகியுள்ளது.