தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சித் ஸ்ரீராம் குரலில் ’அரண்மனை 3’ இரண்டாவது பாடல் வெளியீடு! - sid sriram songs

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் 'அரண்மனை 3' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.

அரண்மனை
அரண்மனை

By

Published : Sep 13, 2021, 3:56 PM IST

குடும்பங்கள் சிரித்துக் கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர்.சி. இவர் இயக்கிய ’அரண்மனை’, ’அரண்மனை 2’ போன்ற பேய்ப் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும் குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் ஆகும்.

அரண்மனை முதல், இரண்டாம் பாகங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தற்போது சுந்தர்.சி. இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா நடிப்பில் ’அரண்மனை 3’ திரைப்படம் உருவாகி ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இப்பாகம் முதல் இரண்டு பாகங்களை விட மிகப்பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அரண்மனை 3

ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா, மனோபாலா, சம்பத், சாக்‌ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை குஷ்பு தயாரிக்க, சி.சத்யா இசையமைக்கிறார்.

முன்னதாக இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது பாடலான 'ரசவாச்சியே' இன்று (செப்.13) வெளியாகி உள்ளது. தனது பின்னணி குரல் மூலம் ரசிகர்களை மயக்கும் குரலுக்கு சொந்தக்காரரான சித் ஸ்ரீராம் இந்தப் பாடலை பாடியுள்ளார். மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இப்பாடல் தற்போது நெட்டிசன்களிையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:சூப்பர் ஸ்டாரை அடுத்து காட்டுக்குள் செல்லும் நடிகர்

ABOUT THE AUTHOR

...view details