இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகண்ணா, விவேக், யோகி பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. திரையரங்குகளில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற இப்படம் சமீபத்தில் ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஓடிடியில் வெளியான இப்படத்தை 12 நாள்களில், 7 கோடி நிமிடங்கள் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகியுள்ள இப்படத்தில் மேலும் ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.