தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அசால்ட் காட்டும் அரபிக் குத்து; 100 மில்லியனை தாண்டியது...! - அரபிக் குத்து

நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளியாக உள்ள ’பீஸ்ட்’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் ‘அரபிக் குத்து’, யூ-ட்யூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனைப் படத்துள்ளது.

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அரபிக் குத்து..!
100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அரபிக் குத்து..!

By

Published : Feb 27, 2022, 2:13 PM IST

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கியக் கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ’அரபிக் குத்து’ பாடலின் லிரிக்கள் வீடியோ பிப்ரவரி 14ஆம் தேதி வெளியானது. இதில், நடிகர் விஜய் நடனமாடும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத், ஜோனிட்டா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் வெளியாகிய அரை மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்கள் யூ-ட்யூபில் பார்த்தனர். இந்நிலையில், பாடல் வெளியாகி 12 நாட்களில், 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மிகக் குறைந்த நாட்களில் 100 மில்லியன் பார்வையை கடந்த முதல் பாடல் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

இதையும் படிங்க:இயக்குநர் சங்கத் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details