கிரியேட்டிவ் என்டெர்டெயினர்ஸ் அண்டு டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் 'கபடதாரி'. கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'காவலுதாரி' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தில், சிபிராஜுக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார்.
நடிகர்கள் சத்யராஜ், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.கே உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'விஸ்வரூபம்' படப்புகழ் பூஜாகுமார் கபடதாரி படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 'சத்யா' திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இத்திரைப்படத்தையும் இயக்குகிறார். சைமன் கிங் இசையமைக்கிறார்.