தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று (மே.02) வெளியானது. இதில் திமுக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைக்கிறது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
'திமுக கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்' - ஏ.ஆர்.ரகுமான் - AR Rahman Tweet to mk stalin
திமுக கூட்டணியின் வெற்றிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான்
இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, திமுக கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.