"அவென்ஜர்ஸ்" திரைப்பட வரிசையில் "அவென்ஜர்ஸ்: எண்ட்கேம்" ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இத்திரைப்படம் உலக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"அவென்ஜர்ஸ்" படத்தில் இணைந்த இசைப் புயல்! - avengers
டெல்லி: உலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவென்ஜர்ஸ் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று பிராந்திய மொழிகளில் வெளிவரும் இத்திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரசிகர்களுக்கு ஏற்ற படி இந்த பாடல் இருக்கும் என்றும், ஏப்ரல் 1ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் முன்னணி திரைப்பட விமர்சகர் தரன் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.
அவென்ஜர்ஸ் திரைப்பட வரிசையில் வெளியாகும் இந்த கடைசி பாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.