கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு மீண்டும் ஒரு படம் நடிக்க உள்ளார். ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைக்க உள்ளதாக கௌதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மீண்டும் இணையும் மெகா கூட்டணி! - கெளதம் மேனனின் படங்கள்
சிம்பு - கௌதம் மேனன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைக்க உள்ளார்.
ar
ஏற்கனவே இந்தக் கூட்டணி 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளன. இப்படத்தின் பாடல்கள் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.