மகன் அமீனுடன் இணைந்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த 1990களிலிருந்து தனது இசையால் கட்டிப்போட்டு இந்திய சினிமா ரசிகர்களின் பேவரிட் இசையமைப்பாளராக திகழும் ஏ.ஆர். ரஹ்மான், தான் மேற்கொள்ளும் புது முயற்சிகள் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிப்பார்.
இப்போது லேட்டஸ்டாக தனது மகன் அமீனுடன் சேர்ந்து இசையமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், தொடக்கத்தில் மகன் அமீனுக்கு இசையமைக்க பயிற்சி அளிக்கும் ஏ.ஆர். ரஹ்மான், பின்னர் தன்னிடம் இருக்கும் எலக்ட்ரானிக் கருவியில் இசையமைக்கிறார். இதற்கு ஈடுகொடுக்கும் விதமாக ட்ரம் பீட்களுடன் அமீன், தன்னிடமுள்ள எலக்ரானிக் கருவியில் ரிதம் வாசிக்கிறார்.
சுமார் மூன்று நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த வீடியோவில் தந்தை - மகன் என இணைந்து புதுவிதமான இசையில் ராஜாங்கள் நிகழ்த்தியிருக்கின்றனர்.