இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாகப் பரவிவந்த கரோனா தொற்று மெள்ளமெள்ள குறைந்துவருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.
அரசியல் கட்சியினர், திரையுலகப் பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானும், அவரது மகன் ஏ.ஆர். அமீனும் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்டனர்.