கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எல்லா தரப்பு திரையுலகிலும் தனது இசையால் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான்.
இவர் தற்போது தயாரிப்பாளாரகவும், கதையாசிரியராகவும் திரையுலகில் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இது குறித்து ஏ.ஆர். ரகுமான் ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் 'முதன் முறையாக தான் தயாரிப்பாளராகவும், கதாசிரியாகவும் மாறி, ஒரு இசை ஆன்மாவின் காதல் கதையான '99 சாங்க்ஸ்' படத்தை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எம். மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜூன் மாதம் 21-ம் தேதி வெளியாகவுள்ளதாகவும் ஏ.ஆர் ரகுமான் தெரிவித்திருந்தார்.