வித்தியாசமான கதைக் களத்தோடு தனக்கே உரித்தான பாணியில் சினிமா எடுப்பதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தனித்துவமானவர்.
பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு' ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட புதிய முயற்சியாக அமைந்தது. இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சிறப்பு ஜூரிக்கான தேசிய விருதை வென்றது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 'ஒத்த செருப்பு' இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சனை வைத்து பார்த்திபன் இயக்கி முடித்துள்ளார்.
இதையடுத்து பார்த்திபன் 'இரவின் நிழல்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக (சிங்கிள் ஷாட்) எடுத்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இரவின் நிழல் படத்தின் படப்பிடிப்பை முடித்த பார்த்திபன் இசைக்கோர்ப்பு பணிக்காக ஏ.ஆர்.ரஹ்மானிடம் காண்பித்துள்ளார். அப்போது படத்தை பார்த்த ஏ.ஆர். ரஹ்மான் பார்த்திபனை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பார்த்திபன் தனது ட்விட்டரில், " இரவின் நிழல்-இன்று இசை புயல் ஏஆர்ஆர் பின்னணி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது. முழு படத்தை முதலில் பார்த்ததே ஆஸ்கார் தான். இது சிங்கிள் ஷாட் முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும் உதாரண படமாகவும் இருக்கும்-பாராட்டி கீ-போர்டி-ல் விரல் ஓட்டினார்-வைரல் ஆகப் போகும் இசை பிரள்யத்திற்காக!" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதல் முழு நீள சிங்கிள் ஷாட் படம்! - அசரவைக்கும் பார்த்திபன்