தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு விரைவில் திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா? - ஏ.ஆர்.ரகுமான் மகள்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகள் கதீஜாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான்
ஏ.ஆர்.ரகுமான்

By

Published : Jan 2, 2022, 10:42 PM IST

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இசை ஆளுமையாக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இவருக்கு அமீன் என்கிற ஒரு மகனும், கதீஜா, ரெஹீமா ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

இதில் மூத்த மகளான கதீஜாவுக்கு இன்று (ஜனவரி 2) திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

கரோனா கட்டுப்பாடு காரணமாக, இதில் மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமண தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும், விரைவில் திருமணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள கதீஜா, "ரியாஷ்தீன் ஷேக் முகமது என்பவருடன் என்னுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ரியாஷ்தீன் சவுண்ட் இன்ஜினியராகப் பணியாற்றுகிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தந்தையைப் போலவே இசையில் ஆர்வமுள்ள கதீஜா பல இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நீதிமன்றத்தில் ஆஜராகாத விஷாலுக்கு போட்ட அபராதம் தெரியுமா - கேட்ட ஆடிப்போயிடுவீங்க!

ABOUT THE AUTHOR

...view details