இசை உலகின் ஆஸ்கர் விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் அமெரிக்காவிலுள்ள ரெக்கார்டிங் அகாதமியால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
உலகளவில் சிறந்த இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருதுகள் வழங்கப்படும். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெறும் இந்த விழாவில் இசைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறப்பான பங்காற்றிய ஜாம்பவான்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும்.
இந்நிலையில், லக்ஷமன் உடேகர் இயக்கத்தில் க்ரீதி சனோன் நடிப்பில் வெளியான படம் மிமி. இப்படம் நேரடியாக பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
'மிமி' படத்தில் இடம் பெற்றிருந்த 'பரம் சுந்தரி' பாடல் சமூகவலைதளத்தில் வைரலானது. இப்பாடல் யூடியூப் தளத்தில் அதிகமானோர் பார்த்துள்ளனர். தற்போது மிமி படத்தின் இசை கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.