தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இசையமைப்பாளர் ஷ்ரவன் மறைவு - பிரபலங்கள் இரங்கல் - bollywood mourns shravan rathod death

இசையமைப்பாளர் ஷ்ரவன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஷ்ரவன்
இசையமைப்பாளர் ஷ்ரவன்

By

Published : Apr 23, 2021, 11:38 AM IST

இசையமைப்பாளர் ஷ்ரவன் கரோனா தொற்று காரணமாக நேற்று (ஏப்ரல்.22) மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாடகி ஸ்ரேயா கோஷல்:

ஷ்ரவன் காலமான செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எளிமையான மனிதர் அவர். கரோனா தொற்றால் திரையுலகிறகு மற்றொரு பெரிய இழப்பு. அவரின் குடும்பத்திற்கு கடவுள் பலத்தைத் தரட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்:

எங்கள் இசை சமூகமும், ரசிகர்களும் உங்களை இழக்கிறோம்.

நடிகர் அக்‌ஷய் குமார்:

இசையமைப்பாளர் ஷ்ரவன் காலமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நதீம்-ஷ்ரவன் 90-களில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

ABOUT THE AUTHOR

...view details