தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உதவியாளரை எண்ணி உருகிய அனுஷ்கா - அனுஷ்கா புதிய படம்

மிகவும் இளவயதில் உயிரிழ்ந்த தனது உதவியாளர் ஒருவரை எண்ணி நடிகை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான கருத்தை பதிவிட்டுள்ளார்.

நடிகை அனுஷ்கா

By

Published : May 19, 2019, 10:28 PM IST

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அனுஷ்கா, திரையுலகில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. இரு மொழிகளில் பல்வேறு விதமாக கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

தற்போது மாதவனுடன் இணைந்து 'சைலன்ஸ்' என்ற திரில்லர் படத்தில் நடித்து வரும் இவர், சிரஞ்சீவி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த தனது உதவியாளர் ரவி என்பவரை எண்ணி உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அனுஷ்கா.

உதவியாளர் ரவியுடன் அனுஷ்கா

அதில், நாம் உண்மையாக நேசிப்பவர்கள், நம்மை விட்டு பிரிய மாட்டார்கள். இறப்பால் கூட தொட முடியாத விஷயங்கள் இருக்கின்றன. 14 ஆண்டுகளுக்காக மேலாக தொடரும் பயணத்தில் நெருக்கமான ஒருவர் நம் வாழ்வை விட்டு பிரிந்திருப்பது, நம்மிடம் எதையோ எடுத்துச் சென்றதுபோல் இருப்பதாக உணர்கிறேன்.

7 ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் நிலையில், சிறந்த மனிதரான எனது உதவியாளர் ரவி எண்ணி வியக்கிறேன். இறப்புக்கு பின்னர் என்ன என்பது பற்றி யூகிக்க முடியவில்லை. ஆனாலும் ரவி என இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார், என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details