தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய சாகசம் இதுதான்’ - நடிகை அனுஷ்கா - அனுஷ்கா திரைப்படங்கள்

நடிகை அனுஷ்கா ஷெட்டி தன் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய சாகசம் என்ன என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா
அனுஷ்கா

By

Published : Aug 2, 2020, 12:24 PM IST

தெலுங்கு சினிமாவில் 2005ஆம் ஆண்டு வெளியான 'சூப்பர்' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுஷ்கா. அதற்குப் பிறகு தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா தான் நடித்த படங்களில் செய்த சாகசம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, "அருந்ததி, பாகுபலி மற்றும் பாகமதி ஆகிய படங்களுக்காக வாள் சண்டையும், குதிரை சவாரியும் கற்றுக்கொண்டேன். இவை அனைத்தும் எனக்கு மிகப்பெரிய சாகசங்கள்.

மேலும், 'பில்லா' தெலுங்கு ரீமேக் படத்தில் நான் செய்த சாகசம்தான், என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய சாகசம் ஆகும். அப்படத்தின் இயக்குநர் உயரத்திலிருந்து குதிக்க வேண்டும் என்று சொன்னபோது, சம்மதம் தெரிவித்தேன்.

ஆனால், படப்பிடிப்புக்கு சென்ற நாளன்று, மிகவும் பயந்தேன். ஏனென்றால், எனக்கு சிறுவயதிலிருந்தே உயரத்தைக் கண்டால் பயம். அந்த பயத்தை போக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்தக் காட்சியின்போது தலையில் ஆணி தாக்கியதுபோல் இருந்தது" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:'திரைப் பயணத்தை சிறப்பித்த ரசிகர்களுக்கு நன்றி' - நடிகை ஸ்ருதி ஹாசன்!

ABOUT THE AUTHOR

...view details