தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கரோனா சூழலிலிருந்து வெளியே வர இந்த ஆற்றல் முக்கியம்' - அனுஷ்கா - அனுஷ்கா ஷெட்டியின் படங்கள்

சென்னை: கரோனா தொற்றிலிருந்து வெளியே வர நமக்கு நேர்மறையான எண்ணங்கள் மிகமுக்கியம் என நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

anushka
anushka

By

Published : May 4, 2021, 9:47 PM IST

இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் மிகக் கடுமையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. மேலும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களது சமூகவலைதளப்பக்கங்கள் வாயிலாக கரோனா தொடர்பான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா தனது சமூகவலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, " இது சோதனையான காலட்டமாக இருக்கிறது. அனைவரும் அவர்களால் முடிந்த சிற்பபான உதவிகளைச் செய்ய முயல்கின்றனர். ஈடுசெய்ய முடியாத இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இந்தக் கடிமான சூழலில் இருந்து மீண்டு வர நாம் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம். தயவு செய்து விதிமுறைகளை பின்பற்றுங்கள். வீட்டிலேயே இருங்கள்.

உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் தொடர்ந்து பேசுங்கள். எல்லோருக்கும் அவர்கள் நினைக்கும் விஷயத்தை வெளிப்படுத்த தெரியாது. மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைப் பாருங்கள். நேர்மறையாக இருங்கள். அனைவரையும் தேற்ற அந்த ஆற்றல்தான் நமக்குத் தேவை.

உங்களால் முடிந்தது ஒரு பிரார்த்தனையாக இருந்தாலும் அதைச் செய்து உதவுங்கள். நாம் இதைத் கடந்து வருவோம். இந்தத் தருணத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி எதிர் மறையான விஷயங்களில் நம் சக்தியை வீணடிக்க வேண்டாம். மனிதர்களாக இருக்கும் வலிமையை நாம் உண்மையில் சேர்ந்து ஒன்றினணைந்து இதிலிருந்து அழகாக வெளியே வரலாம். அனைவருக்கும் என் அன்பும் பிரார்த்தனைகளும்" என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details