தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பரவிவரும் காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுஷ்கா! - Anushka Shetty love

தனக்கும், பிரபாஸுக்கும் இடையே காதல் இல்லை என்று நடிகை அனுஷ்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பரவி வரும் காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுஷ்கா
பரவி வரும் காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுஷ்கா

By

Published : Mar 17, 2020, 9:10 PM IST

'ரெண்டு' படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. இதையடுத்து தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். இவரும், பிரபாஸும் நீண்ட வருடங்களாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கு இருவரும் பலமுறை மறுப்பு தெரிவித்தும், தொடர்ந்து இந்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தொடர்ந்து இந்த வதந்தி பரப்படுவதால் கடுப்பான அனுஷ்கா, தங்களுக்குள் ஒன்றும் இல்லை என்று சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், ''நானும், பிரபாஸும் 15 வருடங்களாக நண்பர்களாக உள்ளோம். மூன்று மணிக்கு கூட என்னுடன் பேசக்கூடிய அளவிற்கு என்னுடைய நெருங்கிய நண்பர் அவர். இதுதவிர எங்கள் இருவருக்கும் இடையே வேறு ஒன்றும் இல்லை.

இதுபோன்று தொடர்ந்து வெளியாகும் செய்தி எதுவும் உண்மை இல்லை. என் திருமண விஷயத்தில் ஏன் இப்படி ஒரு பிரச்சனை ஏற்படுகிறது என்று தெரியவில்லை'' என்று பேசியுள்ளார். நடிகை அனுஷ்கா சமீபத்தில் திரைத்துறையில் 15வருடங்கள் நிறைவு செய்ததை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அல்லு அர்ஜூன் படத்தில் அர்ஜூன் ரெட்டி 2 ரெபரென்ஸ்

ABOUT THE AUTHOR

...view details