தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அனுஷ்கா ரசிகர்களுக்கு 'சைலன்ஸ்' படக்குழு தந்த சிறப்பு அறிவிப்பு! - அமெரிக்கா

நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகிவரும் 'சைலன்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

anushka

By

Published : Jul 19, 2019, 5:24 PM IST

Updated : Jul 19, 2019, 5:34 PM IST

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த அனுஷ்கா ஷெட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாகுமதி படத்திற்கு பின் திரையுலகிலிருந்து விலகியிருந்தார்.

தற்போது அனுஷ்கா, ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ‘சைலன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அனுஷ்கா நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இவர்களுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இப்படத்தை பீப்புள் மீடியா ஃபேக்ட்ரி - கோனா ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூலை 21ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூலை 21ஆம் தேதி வெளியிட முக்கிய காரணம் அனுஷ்கா திரையுலகில் கால்பதித்து 14 வருடங்கள் ஆகின்றன. அதனை சிறப்பிக்கும் விதமாக படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பையடுத்து அனுஷ்கா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #14YearsOfAnushkaShetty என்ற ஹேஷ் டேக்குடன் கொண்டாடிவருகின்றனர். சில வருட இடைவெளிக்கு பின் அனுஷ்கா இப்படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும் உள்ளனர்.

Last Updated : Jul 19, 2019, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details