'சைரா நரசிம்ம ரெட்டி' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகை அனுஷ்கா நடிப்பில் 'நிசப்தம்' திரைப்படம் உருவாகிவருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தில் மாதவன், மைக்கேல் மேட்சென், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வரும் 31ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், நடிகை அனுஷ்கா புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபா கோயிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.