சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’சந்திரமுகி’. பி.வாசு இயக்கிய இத்திரைப்படத்தில் ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். திகில் கலந்த த்ரில்லர் பாணியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படம் மலையாளத்தில் வெளியான 'மணிசித்திரத்தாலு' படத்தின் ரீமேக் ஆகும்.
இதையடுத்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இப்படத்தையும் பி. வாசு இயக்கும் நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதுமட்டுமின்றி 'வேட்டையன்' கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.
இது வேட்டையன் ஆட்டம்